/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைதீர் கூட்டத்தில் சக்கர நாற்காலி வழங்கல்
/
குறைதீர் கூட்டத்தில் சக்கர நாற்காலி வழங்கல்
ADDED : ஜன 20, 2025 11:47 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, சாலை அமைத்தல், தெருமின்விளக்கு, குடிநீர் வசதி, தொழில் தொடங்க கடனுதவி, நலத்திட்ட உதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொட்பாக பொதுமக்களிடம் இருந்து 305 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 13 மனுக்களும் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக, கை, கால் செயலிழந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலியை வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குப்புசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.