/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண்மை விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
வேளாண்மை விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
வேளாண்மை விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
வேளாண்மை விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : மே 07, 2025 07:22 AM

திருக்கோவிலுார், : திருக்கோவிலுாரில், பணிகள் நிறைவடைந்து பூட்டிக் கிடக்கும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகத்தின் பின்புறத்தில் வேளாண்துறை அலுவலகம் இயங்கி வந்தது.
புதிய பி.டி.ஓ., அலுவலகம் கட்டப்படுவதால், அங்கிருந்து வேளாண்மை அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன்பு காலி செய்யப்பட்டு, வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
வேளாண்துறை அலுவலகம் ஓரிடத்திலும், வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யும் இடம் மற்றொரு இடத்திலும் என விவசாயிகளை அலைக்கழிக்கும் வகையில் இயங்கியது. தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட வேளாண் அலுவலகங்களும் வெவ்வேறு இடத்தில் செயல்பட்டன.
இந்த குறையை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்காக கீரனூர் பைபாஸ் அருகே வருவாய்த் துறையால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேளாண் வணிகத்துறை, மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில், கடந்த 2024ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1ம் தேதி பணிகள் துவங்கின.தற்போது கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து, அந்த மையம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில், இயங்கிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் தங்களுக்கான மானிய விலையில் கிடைக்கும் இடுபொருட்களை வாங்குவதற்கு அலைய வேண்டிய சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.