sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டையில் மேம்பாலம் பணி முடிவடைவது எப்போது?: அதிகாரிகள் மீது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி

/

உளுந்துார்பேட்டையில் மேம்பாலம் பணி முடிவடைவது எப்போது?: அதிகாரிகள் மீது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி

உளுந்துார்பேட்டையில் மேம்பாலம் பணி முடிவடைவது எப்போது?: அதிகாரிகள் மீது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி

உளுந்துார்பேட்டையில் மேம்பாலம் பணி முடிவடைவது எப்போது?: அதிகாரிகள் மீது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி


ADDED : ஆக 10, 2024 06:46 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் முன் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில்நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்பேரில் சென்னை முதல் திருச்சி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2004ம் ஆண்டு துவங்கியது.

இதேபோன்று உளுந்துார்பேட்டை டோல்கேட் முதல் பாடலுார் வரையிலான 55 கி.மீ., துார சாலையை நான்கு வழிச் சாலையாக அமைக்கும் பணியினை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டி.டி.பி.எல்., நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணிகளை துவக்கி முடித்தது. 2009ம் ஆண்டு நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து வாகனப் போக்குவரத்திற்காக சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், எந்தெந்த பகுதியில் மேம்பாலம் அமைப்பது, சர்வீஸ் சாலை அமைப்பது, என சரியான திட்டமிட்டு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அதிக விபத்துகள் ஏற்படும் பகுதி எந்தெந்த பகுதி என கண்டு அறியாமலும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலை, வாகன போக்குவரத்திற்கு எளிதாக இருந்தது. ஆனால் நான்கு வழிச்சாலையால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு, கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் கடந்த 2014ம் ஆண்டு அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து ஆய்வு அறிக்கையை அளிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை துறையிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.

அதன் பின்னரே உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் முன் மேம்பாலம் மற்றும் விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே மற்றும் உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே சர்வீஸ் சாலைகள் அமைக்கவேண்டும் எனவும், பாலி 10 பட்டாலியன் அணி (போலீஸ் பயிற்சி மையம்) முன், ஆசனுார், சிறுவாச்சூர், ஆவிட்டி பகுதிகளில் மேம்பாலம் அமைப்பது என ஆய்வு செய்யப்பட்டு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு பணிகள் துவங்கியது. ஆனால் துவங்கிய வேகத்திலேயே பணிகள் நின்றன. பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சிறுவாச்சூர் மற்றும் ஆவிட்டி பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. கிடப்பிலேயே இருந்து வந்த உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் முன் உள்ள மேம்பால பணிகள் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

ஆனால் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் எப்போது முடியும் என தெரியாத நிலை உள்ளது. மேம்பாலம் பணியை விரைந்து முடிக்காததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பாலம் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர்களும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us