/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது... எப்போது? விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது... எப்போது? விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது... எப்போது? விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது... எப்போது? விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ADDED : ஏப் 21, 2025 05:25 AM

கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கடந்த, 2019,ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ரூ.1.69 கோடி மதிப்பில் பெருவங்கூர் கிராம எல்லையில், சொந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகமாக கடந்த, 2021,ம் ஆண்டு பிப்ரவரியில் தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து உடனடியாக புதிய வட்டார போக்குவரத்து அலுவலரும் பொறுப்பேற்று பணிகளை துவக்கினார். ஆனால் அவருக்கான அலுவலகம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் எதுவும் அங்கு முறையாக ஏற்படுத்தி தரப்படவில்லை.
இதனால் கடந்த, 4 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலேயே, வட்டார போக்குவரத்து அலுவலகமும், செயல்பட்டு வருகிறது.
போதிய வசதி இல்லை
இந்நிலையில் அங்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கான தனி அறை, கூட்டம் நடத்துவதற்கான கட்டமைப்பு, தனி வாகனம், அலுவலக ரிஜிஸ்டர்கள், தஸ்தாவேஜூகள் வைக்க இடம் உள்ளிட்ட எந்த விதமான வசதிகளும் கிடையாது.
இதனால் வரி வசூல் பணிகள், கனரக வாகனங்கள் புதுப்பிப்பு, மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான ஆலோசனை வழங்கல், போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வதில் சிரமம் நீடிக்கிறது. அத்துடன் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும் முழுமையாக செயல்பட முடியாத சூழல் நிலவுகிறது.
மண் சாலையால் அவதி
இது ஒருபுறம் இருக்க, இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியும் மண் சாலையாக இருப்பதால் இங்கு வருபவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் லைசென்ஸ் பெறுதல் போன்ற பணிகளுக்கு அலுவலகத்திற்கு வந்து செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அதனால், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான கட்டமைப்பு வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் தரத்தையும் உயர்த்தப்பட வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.

