/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலைய திட்டம் துவங்குவது... எப்போது? விரைந்து துவங்கி பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
/
திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலைய திட்டம் துவங்குவது... எப்போது? விரைந்து துவங்கி பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலைய திட்டம் துவங்குவது... எப்போது? விரைந்து துவங்கி பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலைய திட்டம் துவங்குவது... எப்போது? விரைந்து துவங்கி பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 12:39 AM

திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும், நேரடி பஸ் வசதி உள்ளது. இந்த பஸ் நிலையத்தை நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு ஏற்படும் நெரிசலால் பஸ் நிலையத்திற்குள் வராமல், நீண்ட துாரம் செல்லும் வெளியூர் பஸ்கள், புறவழிச்சாலையிலேயே சென்று விடுகின்றன. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வாக, புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் குடும்பத்தினர், அப்போதைய பேரூராட்சிக்கு பஸ் நிலையம் அமைக்க, பம்ப் ஹவுஸ் அருகே தானமாக இடத்தை வழங்கினர். அப்பகுதியில் புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் போது, திருக்கோவிலுாரில், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது.
பொன்முடி எம்.எல்.ஏ., கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து டெண்டர் பணிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் வேண்டும் என்ற மக்களின், 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் வகையில் பட்ஜெட் மானிய கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் பணிகளை விரைவாக துவங்க, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தற்போதைய இடத்தில் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டால் அரசு டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் வந்து செல்லும் பஸ் நிலையமாக மாற்றப்படும். அத்துடன் புதிதாக அமையும் பஸ் நிலையத்துடன் புறவழிச்சாலை இணைக்கப்படுவதன் மூலம் நகரம் விரிவடையும்.
நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு இது பெரும் தீர்வாக அமையும். இந்த நிலையில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து துவங்கி முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.