/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராமப்புற விஜிலென்ஸ் போலீஸ் திட்டம் மீண்டும் துவங்குவது... எப்போது? கஞ்சா, சாராய விற்பனையை தடுக்க அவசியம் தேவை
/
கிராமப்புற விஜிலென்ஸ் போலீஸ் திட்டம் மீண்டும் துவங்குவது... எப்போது? கஞ்சா, சாராய விற்பனையை தடுக்க அவசியம் தேவை
கிராமப்புற விஜிலென்ஸ் போலீஸ் திட்டம் மீண்டும் துவங்குவது... எப்போது? கஞ்சா, சாராய விற்பனையை தடுக்க அவசியம் தேவை
கிராமப்புற விஜிலென்ஸ் போலீஸ் திட்டம் மீண்டும் துவங்குவது... எப்போது? கஞ்சா, சாராய விற்பனையை தடுக்க அவசியம் தேவை
ADDED : ஜூலை 21, 2025 05:17 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம புறங்களில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை, திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்களுக்கும் - போலீசாருக்குமிடையே நல்லுணர்வு ஏற்படும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு, 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' என்ற கிராம விழிப்புணர்வு போலீஸ் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 4 - 5 கிராமங்களுக்கு ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டனர். அனைத்து கிராமங்களிலும் போலீசாருடன், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. மேலும், ஊர் பொது இடங்களில் போலீசார் பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு, 'வாட்ஸ்ஆப்' குழுவும் துவங்கப்பட்டது.
ஊரில் நடைபெறும் திருவிழா, விளையாட்டு போட்டி, பிரச்னை, அசம்பாவிதம் மற்றும் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை குறித்த தகவல் பொதுமக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவேற்றம் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கிராமங்களில் சிறிய பிரச்னைகள் நடந்தாலும், உடனடியாக போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று அங்கு நிலவும் பிரச்னையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில், காலப்போக்கில் இந்த திட்டம் முறையாக செயல்படவில்லை. போலீசார் பலர் பணிமாறுதல் பெற்று வேறு ஸ்டேஷனுக்கு சென்றனர். அவர்களுக்கு பதிலாக வேறு போலீசார், கிராம விழிப்புணர்வு குழுவுக்கு நியமிக்கப்படவில்லை.
இதனால் கிராமங்களில் நடைபெறும் பிரச்னைகள், குற்ற சம்பவங்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவது குறைந்து விட்டது.
குறிப்பாக கிராமங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, பொலிவிழந்த நிலையில் உள்ள கிராம விழிப்புணர்வு போலீஸ் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.