ADDED : ஜன 07, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சாந்தகுமார் மனைவி உமா, 25; இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1ம் தேதி காலை 11:00 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற உமா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.