ADDED : மே 24, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே கணவர் மீது நடவடிக்கை கோரி, மனைவி போலீசில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை அடுத்த உண்டுக்கல் வளைவு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி திவ்யா,29; இருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின், சக்திவேல் அவரது மனைவியை அடித்து, கொடுமைப்படுத்தினார். மேலும், கடந்த பிப்ரவரியில், அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்தார். இது குறித்து திவ்யா, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சக்திவேல், செல்வி மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த செல்வம் ஆகிய, 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.