ADDED : ஆக 29, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: நல்லாத்துார் கிராமத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 45; இவரது மனைவி ரேவதி, 44; இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ரேவதி கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.