ADDED : நவ 30, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திட்டக்குடி அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 44; இவரது மனைவி அருணா, 24; சரவணன் சென்னையில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அருணா சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த 19 ம் தேதி காலை 8:00 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.