ADDED : ஜூலை 28, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி பிரியதர்ஷினி,19; தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரியதர்ஷினி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது கணவர் கோவிந்தன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.