ADDED : ஆக 14, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், ;சங்கராபுரம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை, மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 34; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை, 30; இவர்களுக்கு 9 வயதில் ஆண் மற்றும் 7 வயதில் பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பாஸ்கர், கடந்த மாதம் வெளிநாடு சென்றார்.
இந்நிலையில், வீட்டிலிருந்த மணிமேகலையை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தகவல் அறிந்து சொந்த ஊருக்கு வந்த பாஸ்கர் சங்கராபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.