ADDED : செப் 04, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சசிதரன் மனைவி அஸ்வதி, 24; இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த அஸ்வதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவி அஸ்வதியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் சசிதரன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.