/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரத்திற்கு நேரடியாக பஸ்... இயக்கப்படுமா; பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை தேவை

ADDED : டிச 31, 2024 06:49 AM
கள்ளக்குறிச்சியிலிருந்து 105 கி.மீ., தொலைவில் சிதம்பரம் உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அதிகளவிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவில், தில்லை காளி கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
மேலும் கங்கைகொண்டசோழபுரம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுரை உள்ளிட்ட புராதன நகரப்பகுதிகளுக்கும் இவ்வழியாககவே செல்ல வேண்டி உள்ளது.
ஆனால் கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரம் செல்வதற்கு இதுவரை ஒரு அரசு பஸ் வசதி கூட இல்லை. இதனால் இங்கிருந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் தனியார் பஸ்கள் மூலமாகவே சென்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியிலிருந்து அதிகாலை 4 மணி, காலை 6.20, 6.23, பகல் 11.15, பிற்பகல் 1:27 மணி, மாலை 4.15, இரவு 7.40 மணி என மொத்தமாக 7 முறை மட்டும் தனியார் பஸ்கள் சிதம்பரத்திற்கு இயக்கப்படுகின்றன. இவைகளில் ஒரு சில பஸ்கள் வேப்பூர் வழியாகவும், ஒரு சில பஸ்கள் உளுந்துார்பேட்டை வழியாகவும் சென்று வருகின்றன.
ஆனால் இந்த வழித்தடத்தில் செல்லும் பல தனியார் பஸ்கள் மிகவும் தாமதமாக செல்கின்றன. அத்துடன் உளுந்துார்பேட்டையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி, ஆட்களை ஏற்றிக்கொண்டு பின்னரே சிதம்பரம் செல்கின்றன. அதிலும் சில பஸ்கள் பாதி வழியிலேயே நிறுத்தி 'கட் சர்வீஸ்' செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் சிதம்பரம் மற்றும் அதன் வழியாக வேறு இடங்களுக்கு செல்லும் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் வெவ்வேறு பஸ்களை பிடித்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சியிலிருந்து நேரடியான அரசு பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகவும் வேதனைப்பட்டு வருகின்றனர்.
எனவே பொது மக்களின் நீண்ட நாள் கோரி்க்கைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரம் மற்றும் அதனை கடந்து செல்லும் பகுதிகளுக்கும் செல்ல அரசு பஸ் வசதியினை உடன் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.