/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி... அமைக்கப்படுமா; விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
/
மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி... அமைக்கப்படுமா; விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி... அமைக்கப்படுமா; விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி... அமைக்கப்படுமா; விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
ADDED : அக் 30, 2025 06:43 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி அமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டை மையமாகக் கொண்டு 30க்கும் மேற்பட்ட கிராமங்களும்,10க்கும் மேற்பட்ட உள்கிராமங்களும் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் முதன்மை தொழில் விவசாயம். நெல், மக்காசோளம், மரவள்ளி, கம்பு, கேழ்வரகு, சூரியகாந்தி விதை மற்றும் கரும்பு பயிர்கள் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
மூங்கில்துறைப்பட்டில் இயங்கும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குவதால், இப்பகுதியில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். இதனால் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் மற்ற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டிக்கும், 45 கி.மீ., தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சிக்கு, 37 கி.மீ., தொலைவில் உள்ள திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் விளை பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு வாடகை, நீண்ட துாரம் சென்று திரும்புவதால் கால விரயமும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் விவசாய விளை பொருட்களை ஏற்றி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். விளை பொருட்களை வாகனத்தில் ஏற்றி செல்லும் போது பல முறை மழையில் நனைந்து வீணாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி, அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இது வரை மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி அமைக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்; மூங்கில்துறைப்பட்டில் மார்க்கெட் கமிட்டி அமைத்தால் விவசாயிகள் அனைத்து விதங்களிலும் லாபத்தை ஈட்ட முடியும். ஒவ்வொரு சட்டசபை தேர்தலின்போது, தொகுதி அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் விவசாயிகளின் கோரிக்கையான மார்க்கெட் கமிட்டி கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். அதன் பிறகு விவசாயிகளை கண்டு கொள்வதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மார்க்கெட் கமிட்டியை விரைவாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

