/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?
/
திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?
திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?
திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா?
ADDED : செப் 11, 2024 01:22 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகரில் பெருகிவிட்ட ஆக்கிரமிப்பால் சாலைகள் குறுகி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுாரில் வாகனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் விஸ்தாரமான தெருக்களை கொண்ட நகரமாக இருந்தாலும், சாலைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகிப்போய் உள்ளன.
தெற்கு வீதி, சன்னதி வீதி, கடை வீதிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகி தினசரி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுார் மார்க்கத்தில் இருந்து வரும் செவலை ரோடு முழுதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர காய்கறி கடைகளின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக வடக்கு வீதி, கடை வீதி, சன்னதி வீதி, செவலை ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலை ஆக்கிரமிப்பினால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றமும் அவ்வப்போது உத்தரவிட்ட நிலையில், திருக்கோவிலுாரில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து குறியிடுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், திருக்கோவிலுார் நகராட்சியோ நெடுஞ்சாலைத் துறையோ ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, கலெக்டர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்தி திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்புகளை அற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.