/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
/
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ADDED : மே 30, 2025 11:49 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சாலை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கோவிலுாரின் அனைத்து பகுதிகளும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஐந்து முனை சந்திப்பிலிருந்து பிரியும் செவலை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
கடலூர் - சித்துார் சாலை மார்க்கத்தில் திருக்கோவிலுார் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் செவலை சாலை ரோடு வழியாக செல்வது தான் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும், சாலையை ஆக்கிரமித்து 'ஷெட்' போடப்பட்டு இருப்பதுடன், சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால் செவலை சாலையில், இருக்கும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரும் இச்சாலையை கண்காணிக்க வேண்டியது அவசியம்,' என்றனர்.