sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா? விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது

/

சின்னசேலம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா? விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது

சின்னசேலம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா? விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது

சின்னசேலம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா? விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது


ADDED : பிப் 15, 2024 11:47 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் வழியாக ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது.

சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் 355 ஏக்கர் பரப்பளவிலான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பாசனத்தை நம்பி, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏரியின் மூலம் அருகில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர காரணமாக இருந்து வருகிறது. இதன் மூலம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்டோருக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சின்னசேலம் பேரூராட்சி பகுதிகளான அம்சாகுளம், விஜயபுரம், காந்தி ரோடு, மூங்கில்பாடி ரோடு, மேட்டுத் தெரு, கடை வீதி உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கால்வாய் வழியாக சின்னசேலம் ஏரியில் நேரடியாக கலப்பது பல ஆண்டுகளாகவே தொடர்கிறது.

அத்துடன் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் பல குடியிருப்புகள் உள்ளதால், நீர் மாசுபட்டு அப்பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. தொடர்ந்து பருவ மழை காலங்களில் கழிவுநீரோடு, மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதால், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

இதுபோன்று நீர் ஆதாரங்களில், கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் ஏரிகளில் உள்ள தண்ணீரை மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நீர் நிலைகளில் வாழக்கூடிய உயிரினங்களும் அழிந்து வருகிறது.

ஏரியினுள் சாக்கடை நீர் கலந்து தண்ணீர் மாசுபடுவதால், அருகில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்து உபயோகபடுத்தப்படாத நிலை ஏற்படுகிறது.

தெருக்களின் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

சின்னசேலம் பேரூராட்சி பகுதி, வளர்ச்சியடைந்து வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தொகை பெருகி, அதற்கேற்றார்போல் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிமாகி வருகிறது.

ஏரியில் கலக்கும் கழிவுநீரின் அளவும் அதிகமாவதால், நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து இப்பகுதியின் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகும்.

எனவே சின்னசேலம் பேரூராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக ஏரியில் கலப்பதை தடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து சுகாதாரம், விவசாய பணிகள் பாதிப்புகள் ஏற்படாதவாறு முறைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us