/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஜர்சன நாளன்று டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்படுமா? விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
/
விஜர்சன நாளன்று டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்படுமா? விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
விஜர்சன நாளன்று டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்படுமா? விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
விஜர்சன நாளன்று டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்படுமா? விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
ADDED : செப் 01, 2024 11:05 PM

விநாயகர் சதுர்த்தி வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் விநாயகர் சிலை விற்பனை, சிலை நிறுவுதல், வழிபடுதல் மற்றும் சிலைகள் கரைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு டி.எஸ்.பி., தேவராஜ் தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் விநாயகர் சிலைகள் உரிய அனுமதி பெற்று நிறுவ வேண்டும்.
புதிய இடங்களில் விநாயகர் சிலை நிறுவ அனுமதி கிடையாது. சிலைகள் அடிதளம் உட்பட 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும்.
மேலும், சிலை நிறுவுதலுக்கான பாதுகாப்பு குழுவில் ஒரு காவலர் மற்றும் 2 தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சி.சி.டி.வி., காமிராக்கள் பொருத்தப்படவேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகள் நிறுவக்கூடாது. சர்ச்சைக்குரிய இடங்களில் சிலைகள் நிறுவப்படுவதற்கு அனுமதி கிடையாது.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சிகள், சமுதாய கட்சி தலைவர்களுக்கு ஆதரவாக டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது.மின் விளக்குகள், ஒலி பெருக்கி கருவிகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் எடுக்க கூடாது.
கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்களிலும், ஊர்வலத்தின் போதும் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
மேலும்காவல் துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்ல வேண்டும். மசூதிகளில் தொழுகைகள் நடக்கும் சமயங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது.
ஊர்வலத்தின் போது பிற மதம் சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமான செயல்கள் மற்றும் வாசகங்களை பயன்படுத்த கூடாது. பொது இடங்களில் நிறுவப்பட்ட சிலைகளை 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்து விட வேண்டும்.
கச்சிராயபாளையம் கோமுகி அணை, சின்னசேலம் அம்சாகுளம் ஏரி, தியாகதுருகம் பிரதிவிமங்கலம் ஏரி ஆகிய பகுதிகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
விநாயகர் ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் சம்மந்தப்பட்ட விழா குழுவினர் மீது காவல் துறை மூலம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கான அனுமதி வழங்க சிலை அமைப்பினரை அலைக்கழிக்க கூடாது. நீர் நிலைகளில் சிலைகள் கரைப்பதற்கு மின் விளக்கு வசதி, கிரேன் இயந்திரம் ஏற்பாடு செய்ய வேண்டும். சிலைகள் நிறுவும் இடங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்கவும், பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்க வேண்டும். சிலைகள் ஊர்வலத்தின் போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். அதேபோல் கரைக்கும் இடங்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், ஏழுமலை, காமராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னின்று நடத்தும் அமைப்பினர், ஹிந்து முன்னணியினர் உட்பட பலர் பங்கேற்றனர்.