/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உண்டு, உறைவிட பள்ளிகளில் மாணவர்களுக்கு அட்டவணைப்படி உணவு வழங்குவதில்லை கல்வராயன்மலையில் அதிகாரிகள் கவனிப்பார்களா?

ADDED : செப் 01, 2025 11:44 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் உள்ள 75 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் தங்கி பயிலுகின்றனர்.
இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம் உட்பட பல்வேறு காரணங்க ளுக்காக வெளியே சென்று விடுகின்றனர். இதனால், அங்குள்ள விடுதி சமையலர்களும் அட்டவணையை பின்பற்றி உணவு வழங்குவதில்லை. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தினமும் காலை சேமியா, கிச்சடி, இல்லி, பூரி, பொங்கல், தோசை உள்ளிட்ட டிபன் வகைகள் அட்டவணையில் உள்ளவாறு வழங்க வேண்டும். மதிய வேளையில் முட்டையுடன் கூடிய உணவும், இரவில் டிபன் வகைகளும் வழங்க வேண்டும். இதில், வாரந்தோறும் புதன் கிழமை மட்டன் மற்றும் சிக்கன் குருமா வழங்க வேண்டும். ஆனால், மாணவர்களுக்கு மட்டன் வழங்கப்படுவதே இல்லை.
சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு கூறி வற்புறுத்தி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் திங்கட்கிழமை காலை உணவு வழங்குவதில்லை. மதியம் உணவு மட்டுமே வழங்குவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காலை பணிக்கு வரும் சமையலர்கள் அரிசி, காய்கறிகளை முறையாக கழுவாமல் அவசர, அவசரமாக சமைத்து மதிய உணவு வழங்குவதால் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் மாணவர்களின் உணவுக்காக வழங்கப்படும் பொருட்கள் கண்க்கில் வருவதில்லை.
எனவே, கல்வராயன்மலை பகுதியில் உள்ள உண்டு, உறைவிட பள்ளிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்டு அட்டவணை யை பின்பற்றி மாணவர்களுக்கு சத்தான, தரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.