/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதிகாரிகள் அலட்சியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

ADDED : மே 13, 2025 11:50 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு கொண்டு வந்தார்.
கேரி பேக்குகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் கேரி பேக் பயன்பாட்டை குறைத்து மஞ்சள் பைக்கு மாறினர்.
அதிகாரிகளும் அவ்வப்போது கடைகளில் திடீர் சோதனை நடத்தி கடைகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
காலப்போக்கில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்வதை தவிர்த்தனர். இதனால், சங்கராபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள டீ கடை, ஓட்டல், மளிகை மற்றும் பூக்கடைகள் என அனைத்து கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.