sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் பாதை பணிகள் முழுமைபெறுமா?

/

கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் பாதை பணிகள் முழுமைபெறுமா?

கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் பாதை பணிகள் முழுமைபெறுமா?

கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் பாதை பணிகள் முழுமைபெறுமா?


ADDED : மே 08, 2025 01:50 AM

Google News

ADDED : மே 08, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2017 ம் ஆண்டு துவங்கியது.

இதில், 17.4 கி.மீ., நீளத்திற்கு பணிகள் திட்டமிடப்பட்டு நடந்தன.

பொற்படாக்குறிச்சி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு, அங்கு ரயில் நிலையமும் கட்டப்பட்டது. அத்துடன் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அளவீட்டு பணிகள் முடிந்து, கல் நட்டு சீரமைக்கப்பட்டது.

ஆனால் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் ரயில் நிலையம் அமைப்பற்கு பதிலாக, மாடூர் உள்ளிட்ட வெளிப்புறங்களில் அமைக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்னக ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டு,

நிலம் கையகப்படுத்த வழங்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டது.

ஆனால் கடந்த, 2024 ம் ஆண்டு மாவட்ட நிர்வாக பரிந்துரை மறுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த தேவையான நிதி தென்னக ரயில்வே நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு முன்பாக, 5.3 கி.மீ., வரையிலான பொற்படாக்குறிச்சி நிலையம் வரையில், 12.1 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்ட புதிய ரயில்பாதையில் தென்னக ரயில்வே அதிகாரிகள், சென்னை ரயில்வே பாதுகாப்பு மற்றும் கட்டுமான பிரிவு அதிகாரிகளுடன் அதிவேக ரயிலை இயக்கி, வெள்ளோட்டம் பார்த்து சென்று விட்டனர்.

தற்போது பொற்படாக்குறிச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான 5.3 கி.மீ., தொலைவிற்கான ரயில் பாதை பணிகள் துவங்காமல் இருப்பது, கள்ளக்குறிச்சி-சின்னசேலம் ரயில்பாதை திட்டம் பொற்படாக்குறிச்சியோடு முடிந்துவிடுமோ என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் எவ்வித தகவலும் தராமல் இருப்பது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

தென்னக ரயில்வே சேலம் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடக்கும் பணிகள் மற்றும் நடக்க உள்ள பணிகள் குறித்த பட்டியல் சமீபத்தில், வெளியிடப்பட்டது. அதில், பொற்படாக்குறிச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான ரயில் திட்ட பணிகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

ஆனால் சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மின்பாதை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் கள்ளக்குறிச்சி வரையிலான ரயில் பாதை பணிகளை விரைந்து துவக்கி, கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகளை முடித்து, புதிய ரயிலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எம்.பி., கோரிக்கை

தென்னக ரயில்வே சேலம் கோட்டத்திற்குட்பட்ட எம்.பி.,க்களுடான வருடாந்திர ஆலோசனை கூட்டம், பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், பொற்படாக்குறிச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதனை இங்கிருந்து அரகண்டநல்லுார் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.








      Dinamalar
      Follow us