/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பிற துறை அலுவலகம் முழுமையாக காலியாகுமா?
/
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பிற துறை அலுவலகம் முழுமையாக காலியாகுமா?
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பிற துறை அலுவலகம் முழுமையாக காலியாகுமா?
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பிற துறை அலுவலகம் முழுமையாக காலியாகுமா?
ADDED : மார் 15, 2025 08:30 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளை பிற துறை அலுவலகங்கள் ஆக்கிரமித்துள்ளால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன் நபார்டு வங்கி நிதி ஆதாரத்தில் 20க்கும் மேற்பட்ட வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் தேவைக்காக இந்த புதிய கட்டட வளாகம் வருவாய்த் துறையினரால் பயன்படுத்தப்பட்டது.
இதனால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் 10க்கும் மேற்பட்டு வகுப்பு மாணவர்கள் பல ஆண்டுகளாக மரத்தடியில் கல்வி கற்கும் அவல நிலை உள்ளது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அங்கிருந்த பிற துறை அலுவலகங்கள் படிப்படியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் பள்ளியின் ஒரு தளத்தில் கலெக்டர் அலுவலகத்தின் பதிவேடுகள் அறை மாற்றப்படாமல் உள்ளது.
வரும் கல்வியாண்டு துவக்கம் முதல் இப்பள்ளியில் உள்ள பிற துறை அலுவலகம் மற்றும் புத்தக குடோன்களை வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.