/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடரும் மாடுகள் திருட்டு காவல்துறை கண்டு கொள்ளுமா?
/
தொடரும் மாடுகள் திருட்டு காவல்துறை கண்டு கொள்ளுமா?
தொடரும் மாடுகள் திருட்டு காவல்துறை கண்டு கொள்ளுமா?
தொடரும் மாடுகள் திருட்டு காவல்துறை கண்டு கொள்ளுமா?
ADDED : நவ 03, 2024 11:18 PM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் தொடரும் மாடுகள் திருட்டால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
விழா காலங்கள் என்றாலே இப்பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் திருடு போவது வழக்கமாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பாக்கம் புதுார், கடுவனுார், பவுஞ்சிப்பட்டு, கானாங்காடு பகுதிகளில் தொடர்ச்சியாக மாடுகள் திருடு போகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகையையொட்டி மாடுகளை திருடும் மர்ம நபர்கள் வெளியூர் சந்தைகளில் விற்று விடுகின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி இனி வரும் காலங்களில் மாடுகளை திருடாமல் இருக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.