/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வயரிங் மற்றும் பைக் பழுது நீக்கும் பயிற்சி
/
வயரிங் மற்றும் பைக் பழுது நீக்கும் பயிற்சி
ADDED : அக் 17, 2025 11:22 PM
கள்ளக்குறிச்சி: இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச வயரிங் மற்றும் பைக் பழுது நீக்கும் பயிற்சிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 30 நாட்கள் வயரிங் பயிற்சி, 30 நாள் பைக் பழுது நீக்குதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான நேர்க்காணல் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் நேர்க்காணலில் பங்கேற்கலாம். கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சியும், எழுத, படிக்க தெரிந்து இருக்க வேண்டும். கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியின் போது மதிய உணவு, காலை மற்றும் மாலையில் தேநீர் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் இந்தியன் வங்கி மற்றும் மத்திய ஊரக வளர்ச்சி துறையாலும் இரண்டு சான்றிதழ்களும், வங்கி கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் மாடூர் சுங்கச்சாவடி அருகே பெரியார் நகரில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வரலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை 04151- 225544 மற்றும் 73394 14616 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.