/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண் அரசு மருத்துவமனையில் சேர்ப்பு
/
ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண் அரசு மருத்துவமனையில் சேர்ப்பு
ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண் அரசு மருத்துவமனையில் சேர்ப்பு
ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண் அரசு மருத்துவமனையில் சேர்ப்பு
ADDED : நவ 22, 2024 06:51 AM

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக ஒரே இடத்தில் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். இதுகுறித்து ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது அப்பெண் மகாலட்சுமி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர் எனவும் தெரியவந்தது.
தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புறநோயாளி பிரிவில் சேர்த்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவரைப் பற்றி தகவல் தெரிய வந்தால் 04151-294755 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.