/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி நகையை அடகு வைத்த பெண் கைது
/
போலி நகையை அடகு வைத்த பெண் கைது
ADDED : ஜூலை 24, 2025 10:05 PM

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியத்தில் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அய்யனார், 37; இவர், ரிஷிவந்தியத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி இவரது கடைக்கு வந்த பெண், சீதேவி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி சாந்தி என அறிமுகப்படுத்திக் கொண்டு, 4 கிராம் எடை கொண்ட மோதிரத்தை அடகு வைத்து 22 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.
தொடர்ந்து, 16ம் தேதி அய்யனார் மோதிரத்தை அடகு வைக்க கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு பரிசோதனையில் அது தங்க மோதிரம் இல்லை என தெரிந்தது.
இதனால் அய்யனார், சீதேவி கிராமத்திற்கு சென்று சாந்தி குறித்து விசாரித்தார். அப்போதுதான் அந்த பெண் கொடுத்த விலாசமும் தவறானது என தெரிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் அருகே போலி அடகு வைத்த பெண் நின்றிருந்தார். இதைப்பார்த்த அய்யனார், அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் தர்மபுரி மாவட்டம், தோமளஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழனி மனைவி சாந்தி, 50; என தெரிந்தது.
மேலும் சாந்தி மீது போலி நகை அடகு வைத்ததாக தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில், வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் போலீசார் சாந்தியை கைது செய்தனர்.