ADDED : நவ 03, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்:கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் கரடிசித்துார் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மனைவி காளியம்மாள், 65; என்பவர் அவரது வீட்டின் பின்புறம் வைத்து மது பாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, காளியம்மாளை கைது செய்தனர்.