/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
/
உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
ADDED : ஆக 12, 2025 11:07 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜா, 39; இவரது உறவினரான சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த மோகன் மனைவி சவு மியா, 22; என்பவர் கடந்த ஜூலை 29ம் தேதி ராஜா வீட்டில் தங்கி, மறுநாள் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
அன்று மாலை ராஜா தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 2.5 சவரன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நகையை சவுமியா எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் நகையை திருடியதாக சவுமியா என தெரியவந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் சவுமியாவை கைது செய்தனர்.