/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சி கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை
/
பூச்சி கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை
ADDED : ஆக 12, 2025 02:36 AM
மூங்கில்துறைப்பட்டு: குடும்ப பிரச்னையில் பூச்சி கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சீர்பாத நல்லுார் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகள் சரஸ்வதி, 36; இவருக்கும் திருவண்ணாமலை தொண்டமானுார் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு கடந்த 6 ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குமாருக்கும் சரஸ்வதிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சரஸ்வதி சீர்பாத நல்லுாரில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார்.
மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை நேற்று குடித்தார். அருகில் இருந்தவர்கள் சரஸ்வதியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.