தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகள் வின்னரசி;33. இவர் நேற்று முன்தினம் தனது அண்ணன் விமல்ராஜ், உறவினரான தியாதுருகம் அடுத்த மேல்விழி கிராமத்தைச் சேர்ந்த ஈசாக் மகன் ரட்சகன் ஆகியோருடன் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த கோனாங்குப்பம் ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்றார்.
திருவிழா முடிந்து இரவு 9:30 மணிக்கு கள்ளக்குறிச்சி நோக்கி சேலம்- சென்னை நான்கு வழி சாலையில் ரட்சகன் மோட்டார் சைக்கிளில் வின்னரசி சென்றார். சின்னமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் வின்னரசி இறந்தார். இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.