ADDED : செப் 24, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : புக்கிரவாரி கிராமத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண், பூச்சி கொல்லி மருந்து குடித்து உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் மனைவி சூர்யா, 25; தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. சூர்யா நீண்ட நாட்களாக வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 11ம் தேதி சூர்யாவிற்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சூர்யா வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த புகாரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.