/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு
/
மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு
ADDED : ஆக 26, 2025 06:55 AM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று திரும்பிய பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் தீபா, 18; இவர் கடந்த 20ம் தேதி பானையங்காலில் உள்ள உறவினர் பெருமாள் வீட்டில் பூப்பறித்த போது பாம்பு கடித்தது. தகவலறிந்த அவரது குடும்பத்தினர் தீபாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்தது 23ம் தேதி தீபா வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.
இந்நிலையில், 24ம் தேதி துணிகள் காயவைப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற தீபா மயங்கி விழுந்தார். உடன் அவரது குடும்பத்தினர் தீபாவை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.