/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கயிறு சிக்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
/
கயிறு சிக்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
ADDED : ஜூலை 07, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: கயிறு காலில் சிக்கி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுநெமிலி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பிரபாதேவி, 38; இவர், நேற்று காலை பசு மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு ஓட்டி சென்றார். அப்போது, கயிறு பிரபாதேவியின் காலில் சிக்கியதால் கிழே விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.