ADDED : பிப் 23, 2024 03:44 AM
கள்ளக்குறிச்சி: மடம் கிராமத்தில் தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி வைதீஸ்வரி,30; இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 14ம் தேதி மாலை 5 மணியளவில் சமையல் பணியில் ஈடுபட்ட வைதீஸ்வரிக்கு மயக்கம் ஏற்பட்டு, நொடிப்பு வந்துள்ளது. கேஸ் அடுப்பு கீழே இருந்ததால் வைதீஸ்வரி அணிந்திருந்த ஆடையில் தீ பற்றி, உடலில் தீ பரவியது.
உடன் அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்த வைதீஸ்வரியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முடியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைதீஸ்வரி உயிரிழந்தார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.