/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் திருட்டு
/
பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் திருட்டு
ADDED : ஜூன் 28, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் அரசு பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரம்யா, 44; இவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு, தியாகதுருகத்தில் இருந்து அரசு பஸ்சில் உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது பையை பார்த்தபோது, பிளேடால் கிழிக்கப்பட்டு அதில் இருந்த, ரூ.26 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.