/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரியின் பின்னால் பைக் மோதி பெண் பரிதாப பலி
/
லாரியின் பின்னால் பைக் மோதி பெண் பரிதாப பலி
ADDED : டிச 05, 2024 05:51 AM
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே நின்று இருந்த லாரியின் பின்னால் பைக் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆனைவாரி பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் குமரேசன், 23; இவர் நேற்று முன்தினம் பைக்கில் உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். பைக்கில் தாய் மங்கவரத்தாரை, 40; உட்கார வைத்து சென்றுள்ளார்.
திருநாவலூர் அடுத்த சிறுத்தனர் அருகே சென்றபோது நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குமரேசன், மங்கவரத்தார் ஆகியோர் படுகாயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மங்கவரத்தார் சகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.