/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

ADDED : அக் 13, 2025 11:08 PM

கள்ளக்குறிச்சி;கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தனது குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த ஏமம் கிராமத்தைச் சேர்ந்த அருள் மனைவி மகாலட்சுமி, 40; இவர் தனது மூன்று குழந்தைகளுடன் நேற்று காலை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை குண்டுகட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். சில நிமிடத்திற்கு பிறகு மகாலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்; கடந்த 3 ஆண்டுகளாக, தனது கணவர் அருள் மது, கஞ்சா போதையில் தன்னையும், குழந்தையும் அடித்து துன்புறுத்தி வருகிறார். திருமணத்தின்போது தாய் வீட்டில் கொடுத்த நகை உள்ளிட்ட சீதனப் பொருட்கள் அனைத்தையும் விற்றுவிட்டார்.
ஊர் சுற்றி வரும் கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடுமையாக தாக்கினார்.
இது குறித்து உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நகை உள்ளிட்ட சீதனப் பொருட்களை மீட்டு தரும்படி புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.