/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 11, 2026 04:35 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். விழாவில் சி.இ.ஓ., கார்த்திகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பாலமுருகன் சான்றிதழ் வழங்கி வாழ்ததுரை வழங்கினர். விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அகிலா, வட்டார தலைவர் செண்பகவல்லி, முன்னாள் நிர்வாகிகள் காந்திமதி, விஜயா, அபிராமி, தமிழரசி, வட்டார பொறுப்பாளர்கள் வேல்முருகன், தனசேகர், வடிவேலு, குமார், உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராஜாராம் நன்றி கூறினார்.

