ADDED : மார் 22, 2026 09:30 PM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆர்ய வைசிய, மகிளா விபாக் மற்றும் வாசவி, வனிதா கிளப் மகளிர் தின விழா நடந்தது. ஆர்ய வைசிய மகிளா விபாக் சங்க தலைவி மணிமேகலை மற்றும் விஜயலஷ்மி, சுகன்யா, ஆனந்தி, ஆண்டாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் 3 வயது 60 வயது வரை என வயதுக்கேற்ப பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆர்ய வைசிய சங்க பெண்கள் பலர் பங்கேற்றனர்.
