/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
/
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
ADDED : அக் 01, 2024 07:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கண்காட்சி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஊரக, நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த 58 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மகளிர் குழுவினர் தயாரித்த மர பொம்மைகள், மூலிகை சோப், மசாலா பொருட்கள், மரசெக்கு எண்ணெய், பினாயில், ஒயர்கூடை, கம்ப்யூட்டர் சாம்பிராணி, பாரம்பரிய அரிசி வகைகள், நெய், காளான், நாட்டுச் சர்க்கரை, சணல் பை,புடவைகள், உளுந்து, முந்திரி, சிறுதானிய உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தை சேர்ந்த மகளிர் முன்னேற்றத்தை உயர்த்தும் வகையில் கண்காட்சியினை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி பயன்பெற பொதுமக்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.