தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பெண்களின் ஆதரவு தி.மு.க.,வுக்கு அதிகரித்துள்ளது: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு  

பெண்களின் ஆதரவு தி.மு.க.,வுக்கு அதிகரித்துள்ளது: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு  

பெண்களின் ஆதரவு தி.மு.க.,வுக்கு அதிகரித்துள்ளது: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு  


ADDED : ஏப் 16, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று ஏந்தல், பெரிய பகண்டை, பொற்பாலம்பட்டு, யால், மையனுார் , பழைய சிறுவங்கூர் சித்தால், பேரால் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றினார். அரசின் திட்டங்கள் போய் சேராத வீடுகளே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மகளிர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டது பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை ரூ. 1500 என அறிவித்துள்ளார். இதனால் தி.மு.க., ஆட்சிக்கு பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. அரசு திட்டங்கள் அனைத்தும் ரிஷிவந்தியம் தொகுதியில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான திட்டங்களை இத்தொகுதியில் செயல்படுத்த அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளியுங்கள். இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசினார். தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், தே.மு.தி.க., நிர்வாகிகள் கோவிந்தன், பழனிவேல் உட்பட தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us