/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
ADDED : மார் 12, 2024 06:23 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாருக்கு இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி துவங்கியது.
திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடக்கமாக தேர்தல் ஆணையம் 575 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்திற்கு கடந்த 9ம் தேதி அனுப்பி வைத்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
இந்த இயந்திரங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை அழிப்பது, புதிய பேட்டரிகளை பொருத்துவது என ஒவ்வொரு இயந்திரத்தையும் சரி பார்த்து சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில், பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து வந்திருக்கும் பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாசில்தார் மாரியாப்பிள்ளை மேற்பார்வையில், தொகுதிக்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் இப்பணியில் உள்ளனர். இப்பணி 3 நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி., மனோஜ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் பொருத்திய நுழைவாயில் வழியாகவே தாலுக்கா அலுவலகத்திற்கு ஊழியர்கள், பொதுமக்கள் பலத்த பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப் படுகின்றனர். அலுவலகம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

