/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி ஆற்றில் ரூ.7.90 கோடியில் உயர்மட்ட பாலம் பணி துவக்கம்
/
கோமுகி ஆற்றில் ரூ.7.90 கோடியில் உயர்மட்ட பாலம் பணி துவக்கம்
கோமுகி ஆற்றில் ரூ.7.90 கோடியில் உயர்மட்ட பாலம் பணி துவக்கம்
கோமுகி ஆற்றில் ரூ.7.90 கோடியில் உயர்மட்ட பாலம் பணி துவக்கம்
ADDED : செப் 27, 2025 02:18 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே கோமுகி ஆற்றில் ரூ 7.90 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவக்க விழா நடந்தது.
தியாகதுருகம் அடுத்த நாகலுாரில் இருந்து பொரசக்குறிச்சி செல்லும் சாலையின் குறுக்கே உள்ள கோமுகி ஆற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், பொறுப்பு அமைச்சர் வேலுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து, பாலம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்து,நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.7.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, பி.டி.ஓ., கொளஞ்சி வேல் முன்னிலை வகித்தனர்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி மேம்பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். துணை பி.டி.ஓ., பிரபுதாஸ் , ஒன்றிய பொறியாளர்கள் வசந்தி, ராமர், பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி, லட்சுமி, உஷா, தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், மணி, சாமிதுரை சாமிதுரை, கணேசன், கலியன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.