/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
ADDED : டிச 02, 2025 05:49 AM

சங்கராபுரம்: சங்காராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னையில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 115 மாணவர்கள் நேர்காணலில் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி துணை முதல்வர் சிவகங்கா, வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன், டிவிஎஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் தேனிஜான் ஆகியோர் வழங்கினர்.