ADDED : ஏப் 06, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட வருவாய் அலகில் தட்டச்சராக பணிபுரிய ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணையை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
இவர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை தாலுகா அலுவலகங்களில் பணிபுரிய உள்ளனர். இந்த நிகழ்வில், டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, மேலாளர் குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

