/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை
/
தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை
ADDED : ஏப் 16, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே செங்கல் சூளை கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் தமிழ்மணி, 23; செங்கல் சூளை கூலி தொழிலாளி. கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்த தமிழ் மணியை வேலைக்கு ஏன் செல்லவில்லை என, தாய் வனமயில் கேட்டுள்ளார்.
அதனால் தமிழ்மணி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். வனமயில் வெளியே சென்று இருந்த போது வீட்டில் தமிழ்மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.