/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தண்ணீர் லாரி ஏறி தொழிலாளி பலி
/
தண்ணீர் லாரி ஏறி தொழிலாளி பலி
ADDED : அக் 31, 2025 02:39 AM
உளுந்துார்பேட்டை:  உளுந்துார்பேட்டை அருகே தண்ணீர் டேங்கர் லாரி ஏறி  வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் அடாபாடா பகுதியை சேர்ந்தவர் தம்புராமாலிக், 42; இவர் உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார்  சிப்காட்டில் கட்டட பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் பணியில் இருந்தபோது அங்கு, கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த வலசை பகுதியைச் சேர்ந்த விஜய், 27;  தண்ணீர் டேங்கர் லாரியை பின் பாக்கமாக எடுத்தார்.
அப்போது  லாரியின் பின்னால் நின்று இருந்த தம்புராமாலிக் மீது லாரி ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

