/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
/
கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
ADDED : டிச 20, 2024 05:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையோர கழிவு நீர் கால்வாய் கான்கிரீட் பள்ளத்தில் விழுந்த வெளிமாநில தொழிலாளி இறந்தார்.
உத்தரபிரதேச மாநிலம், சாகற்புரா பகுதியைச் சேர்ந்தவர் பராஸ், 43; அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன், கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, வேலையை முடித்து விட்டு விடுதிக்கு சென்றார். கச்சேரி சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக கழிவு நீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்தார். அதில் கான்கிரீட் போடுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பியில் அவரது உடல் குத்தியதில் பலத்தகாயமடைந்தார்.
உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பராஸ் இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.