ADDED : அக் 23, 2024 06:31 AM
கள்ளக்குறிச்சி : நாகலுார் அருகே நடந்த சாலை விபத்தில் கூலித்தொழிலாளி இறந்தார்.
வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஆதிமூலம்,47; கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரும், இவரது மனைவி காத்தாயி என்பவரும் டி.வி.எஸ்., மொபட்டில் (டி.என் 25 பி.கே 5917) கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தனர்.
நாகலுார் அருகே சென்ற போது ஆதிமூலம் ஓட்டி சென்ற மொபட் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆதிமூலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காத்தாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடன், காத்தாயியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.